Published : 16 Jun 2021 05:20 PM
Last Updated : 16 Jun 2021 05:20 PM

மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை மாதத் தவணையில் செலுத்தும் வசதி: நவி ஹெல்த் நிறுவனம் அறிமுகம்

சென்னை

மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்தை மாதத் தவணையில் செலுத்தும் வசதியை நவி பொதுக் காப்பீட்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நவி ஹெல்த் நிறுவனம், செயலி (ஆப்) மூலம் காகிதங்கள் இல்லாத டிஜிட்டல் வடிவிலான காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்கிறது. தற்போது மருத்துவக் காப்பீட்டு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையை ஆண்டு சந்தாவாக ஒரே தவணையில் செலுத்தும் வகையில் உள்ளது. இதற்கு பதிலாக ஆண்டு சந்தாவை மாதத் தவணையில் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை மாதத் தவணையில் செலுத்த முடியும். பிரீமியம் தொகை ரூ.240 முதல் ஆரம்பமாகிறது.

காகித ஆவணங்கள் எதுவும் இல்லாமல், இந்தப் பாலிசி பலன்களைக் கோருவது சாத்தியமே. இணைய வழியில் சரிபார்க்கும்போது எல்லா விவரங்களும் சரியாக இருக்கும் பட்சத்தில் கோரிக்கை வைத்த 20 நிமிடங்களில் பாலிசி பலன்களைப் பெற ஒப்புதல் பெற முடியும். இன்சூரன்ஸ் துறையிலேயே பாலிசி பலன் கோரி விண்ணப்பித்தவர்களில் 97.3% அளவு பலன் பெற்றவர்கள் இந்த நவி பொதுக் காப்பீட்டு பாலிசிதாரர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வகையில் தற்போது இந்தியாவில் உள்ள 400 வெவ்வேறு ஊர்களில் அமைந்துள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கை மருத்துவமனைகள் இந்நிறுவன மருத்துவக் காப்பீட்டோடு தொடர்பு கொண்டுள்ளன. இந்த நவி ஹெல்த் செயலியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், அதை https://navi-gi.onelink.me/hwGa/healthinsurance என்ற இணைய முகவரியிலோ அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நவி ஹெல்த் செயலி மூலம் வெவ்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக, 20-க்கும் மேற்பட்ட கட்டணமில்லா சிகிச்சை பெறும் மருத்துவக் காப்பீட்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதில், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பும், சிகிச்சை பெற்றபின் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னும் ஏற்படும் செலவுக்கான இழப்பீடு, கரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவம் செய்தல் என்பது உள்ளிட்ட மொத்தம் 393 வகையான மருத்துவ முறைகளுக்கான செலவுகள், ஆம்புலன்ஸ் வசதி, விஷப்பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மருத்துவம் போன்றவை தவிர, மகப்பேறு மருத்துவம், உயிரைப் பறிக்கவல்ல அபாயகரமான நோய்கள் என அனைத்திற்கும் சிகிச்சை அளிக்கப்படுவதற்கான செலவுகளைப் பரிசீலிப்பது தற்போது நடந்து வருகிறது.

“இந்தியாவில் தற்போது மருத்துவக் காப்பீட்டுப் பாதுகாப்பு பெற்ற நபர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இதற்குக் காரணங்கள் உண்டு. இந்த பாலிசி பெறுவது மிகவும் கடினமானது, சிக்கலானது என்பதையெல்லாம் தாண்டி, அதற்கான செலவு அதிகம் என்று நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது ஒரு முக்கியமான காரணம். சுகாதாரமான வாழ்வுக்கு நாம் செலவிட வேண்டிய தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, மற்ற மருத்துவச் செலவுகளும் அதிகரித்துவிட்டன.

தற்போது நவி ஹெல்த் செயலி மூலம் மருத்துவக் காப்பீட்டு பாலிசி வாங்குவதால்.. மிகப்பெரிய எண்ணிக்கை கொண்ட வாடிக்கையாளர்கள் கட்டுபடியாகும் விலையிலேயே இந்த வசதியைப் பெற முடியும்" என்று நவி பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராம்சந்திர பண்டிட் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x