சன் பார்மாவுக்கு யுஎஸ் எப்டிஏ எச்சரிக்கை

சன் பார்மாவுக்கு யுஎஸ் எப்டிஏ எச்சரிக்கை
Updated on
1 min read

மருந்துகள் தயாரிப்பில் உள்ள சன் பார்மா நிறுவனத்திற்குச் சொந்தமான குஜராத்தில் உள்ள ஹலால் ஆலையில் உற்பத்தி விதி முறைகளை மீறியதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (யுஎஸ் எப்டிஏ) சன்பார்மா நிறுவனத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது. இதனை சன் பார்மா உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஆலையில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் போது ஹலால் ஆலையில் புதிய பொருட்களுக் கான அனுமதியையும் யுஎஸ்எப்டிஏ நிறுத்தி வைத்துள்ளது.

மாற்றங்களை செய்து முடித்த பிறகு யுஎஸ்எப்டிஏ-வை மறு ஆய்வு செய்யும்படி கோரிக்கை வைக்க இருப்பதாகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ள காலத்திற்குள் எச்சரிக்கை கடிதத்திற்கு விரிவான பதிலை அளிக்க உள்ளதாகவும் சன் பார்மா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சன் பார்மா நிறுவனத்தினுடைய நிர்வாக இயக்குநர் திலீப் சாங்வி கூறியதாவது:

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுஎஸ்எப்டிஏ தெரிவித்த அனைத்தையும் எங்கள் குழு நிறைவேற்றிவிட்டது. மேலும் யுஎஸ்எப்டிஏ- விதிமுறைகளை செயல்படுத்தி தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அதுமட்டுமல்லாது நாங்கள் எடுத்த தீர்வு நடவடிக்கைகள் பற்றி அமெரிக்க ஏஜென்ஸி முழுவதும் திருப்தி அடைவதற்கு மேலும் சில முயற்சிகளை எடுக்க இருக்கிறோம். யுஎஸ்எப்டிஏ ஆய்வுக்கு பிறகு வலுவான தீர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in