

ஐடி துறை நிறுவனமான ஜென்சார் டெக்னாலஜியின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக சந்தீப் கிஷோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி கணேஷ் நடராஜனின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
கிஷோர் தற்போது ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் துணைத்தலைவராக இருக்கிறார். இவர் ஹெச்சிஎல் நிறுவனத்தின் லைப் சயின்ஸ் ஹெல்த்கேர் உள்ளிட்ட சில பிரிவுகளுக்கு சர்வதேச தலை வராக இருக்கிறார். இவர் வரும் ஜனவரி 12-ம் ஜென்சார் டெக்னாலஜி நிறுவனத்தில் இணைய இருப்பதாக ஆர்பிஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சந்தீப் கிஷோரை நான் வரவேற்கிறேன், இவர் நிறுவ னத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருப்பார். ஐடி துறையில் இருக்கும் வாய்ப்புகளை பயன் படுத்துவார் என்று நம்புகிறேன். இந்த சமயத்தில், இதுவரை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவி யாக இருந்த கணேஷ் நடராஜ னுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததில் இவரின் பங்கு முக்கியமானது என்று நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா தெரிவித்துள்ளார்.
கிஷோர் மும்பை ஐஐடியில் படித்தவர். தற்போது கலிபோர் னியாவில் பணிபுரி கிறார். முன்னதாக ஹெச்சிஎல் நிறுவனத்தின் இன்ஜினீயரிங் சேவை பிரிவின் தலைவராக இருந்தவர்.