

யுடிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத்தின் (ஆம்பி) தலைவராக இருந்து வருகிறார்.
2011 டிசம்பர் மாதத்திலிருந்து மெக்கென்சி நிறுவனத்தின் தலைமை ஆலோசகராக இருந்தவர். இதே நிறுவனத்தில் இயக்குநராகவும் இருந்தவர்.
2007-ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை வார்பர்க் பின்கஸ் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
உத்திகள் வகுப்பது, பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் மிகச் சிறந்த அனுபவம் கொண்டவர்.
இன்ஃபோசிஸ், பெனட் கோல்மேன் அண்ட் கம்பெனி, மேக்ஸ் நியூயார்க் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் நிர்வாக ரீதியில் பொறுப்புகள் இல்லாத இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவிலும் முதுகலை பட்டங்கள் பெற்றவர்.