Published : 04 Jun 2021 11:47 AM
Last Updated : 04 Jun 2021 11:47 AM

தங்கம் விலை திடீர் குறைவு; பவுனுக்கு ரூ. 320 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40- குறைந்து ரூ.4585- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.36680-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39552-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 1.10 ரூபாய் குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.75.50 -க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.75,500 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x