புதிய வாடிக்கையாளர்களுக்கு 80 சதவீதம் கட்டணம் குறைப்பு: பிஎஸ்என்எல் அறிவிப்பு

புதிய வாடிக்கையாளர்களுக்கு 80 சதவீதம் கட்டணம் குறைப்பு: பிஎஸ்என்எல் அறிவிப்பு
Updated on
1 min read

புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் கட்டணங்களை குறைத்துள் ளது.

இதன்படி புதிய மொபைல் வாடிக்கையாளர்களுக்கு முதல் 2 மாதங்களில் 80 சதவீதம் அளவுக்கு கட்டணம் குறைக் கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் வஸ்தவா தெரிவித்தார்.

இந்த கட்டண குறைப்பு நிமிட கட்டணம் மற்றும் நொடி கட்டணம் வசூலிக்கும் திட்டங்களில் இணைபவர்களுக்கும் பொருந்தும். மொபைல் நெம்பர் போர்டெபிலிட்டி வாடிக்கை யாளர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும்.

37 ரூபாய் செலுத்தி புதிய இணைப்பு வாங்குபவர்கள் பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 10 பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 30 பைசாவும் வசூலிக்கப்படும்.அதேபோல நொடி கட்டணத்தில் இணையும் வாடிக்கையாளர், பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு மூன்று நொடிக்கு ஒரு பைசாவும், இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு 3 நொடிகளுக்கு 2 பைசா கட்ட ணமும் செலுத்த வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in