

அக்ரே வயர்லெஸ் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை வாங்கியதாக தொலைத் தொடர்புத்துறை முன்னணி நிறுவனமான ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகைக்கு பங்குகள் கைமாறின என்கிற விவரங்கள் வெளியிடவில்லை. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் 4ஜி சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக விவரங்கள் மும்பை பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது.
அக்ரே நிறுவனம் ஸ்பெக்ட்ரம் 2300Mhz அகண்ட வரிசையில் 20 Mhz அலைவரிசையை மத்திய பிரதேச ஏரியாவுக்கு வைத்துள்ளது.
இது சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் சேவையளிக்ககூடியது ஆகும். 4ஜி சேவைக்கு பயன்படுத்தக் கூடியது. 2010 ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 124.66 கோடிக்கு வாங்கியது. ஆனால் சேவைக்கு கொண்டு வரவில்லை.
இந்த நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் உறுதியாக வாங்கிக் கொள்வதற்காக ஆகஸ்ட் 26ஆம் தேதி ஒப்பந்தம் செய்துள்ளதாக ஏர்டெல் கூறியுள்ளது.