

அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சி 9 சதவீதமாக இருக்க சாத்தியங்கள், வாய்ப்புகள் இருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் 8 சதவீதம் வளர்ச்சி இருக்கும். ஆனால் அதற்கு துணிச்சலான சில சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டியது அவசியம் என்று பொருளாதார வல்லுநரும், ஹார்வேர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான லாரன்ஸ் சமர்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த விழாவில் இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது.
இந்தியாவை தவிர வளர்ந்து வரும் நாடுகள் தங்களது வளர்ச்சி பாதையில் இருந்து விலகி உள்ளன. இந்தியா தன்னுடைய திறனை உயர்த்தும் பட்சத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கு 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும்.
அடுத்த பத்தாண்டு களுக்கு 8 சதவீத வளர்ச்சியும், அதற்கு அடுத்த பத்தாண்டுகளுக்கு 7.5 சதவீத வளர்ச்சியை அடைய முடியும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இந்தியா இருக்கும் என்றார்.
இவரது கூற்றை உறுதி செய்வது போலவே கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கிறது, அதே சமயத்தில் சீனாவின் வளர்ச்சி 6.9 சதவீதமாக இருந்தது.
உற்பத்தித் துறையை மேம் படுத்த இந்தியா பல நடவடிக்கை களை எடுத்து வருகிறது. தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை இந்தியா பின்பற்றத் தேவை இல்லை. சேவை துறையில் இந்தியாவின் திறமை அதிகமாக உள்ளது. இந்த துறை யில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். வேகமாக முடிவெடுப் பது என்பது இந்தியாவில் கிடை யாது. ஆனால் இனி வேகமாக முடி வெடுக்க வேண்டியது அவசியம்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதைய சூழ்நிலையில் வட்டி விகிதத்தை உயர்த்துவதை தவிர வேறு வழிகள் இல்லை என்று கூறினார்.