

சமீபத்தில் முடிந்த உலக வர்த்தக அமைப்பின் நைரோபி மாநாட்டில் வளரும் நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா கடுமை யான பேச்சுவார்த்தை நடத்தியது என்று மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: அமெரிக்கா உட்பட சில வளர்ந்த நாடுகள் தோகா சுற்று பேச்சு வார்த்தை இந்த மாநாட்டில் தொடர்வதற்கு எதிர்ப்புத் தெரி வித்தன. மாறுபட்ட கருத்துகள் கொண்ட உறுப்பினர்கள் எதிர்காலத் தில் தோகா சுற்று பேச்சுவார்த்தை தொடர்வதற்கு எத்தகைய வழி களை உருவாக்குவது என்பதற் காக கொடுத்த வழிகாட்டுதலை அமைச்சர்கள் அளவிலான குழு ஏற்றுக் கொண்டது.
அதேசமயம் இதை உறுதியாக அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. டிசம்பர் 19-ம் தேதி இறுதி விழாவில் இந்தியா அறிக்கை மட்டும் வெளி யிடவில்லை. உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநரிடம் அமைச்சர்கள் அளவிலான கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எழுத்துபூர்வமாக அளித்துள்ளது என்றார்.
தோகா சுற்றின் ஒரு பகுதியாக வளர்ச்சியடைந்த நாடுகள் விவசா யத்துக்கு அளிக்கும் மானி யத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று வளரும் நாடுகள் கேட்டுக் கொண்டன. சில சமூக அமைப்புகள் மற்றும் தொழில்துறை அறிஞர்கள் இந்த மாநாட்டினால் இந்தியாவுக்கு எந்த பயனும் இருக்காது என்று கூறுகிறார்கள்.