பேமெண்ட் வங்கிகள் மீது அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஐசிஐசிஐ தலைவர் சாந்தா கொச்சர் கருத்து

பேமெண்ட் வங்கிகள் மீது அச்சம் கொள்ளத் தேவையில்லை: ஐசிஐசிஐ தலைவர் சாந்தா கொச்சர் கருத்து
Updated on
1 min read

பேமெண்ட் வங்கிகளை பார்த்து அச்சம் கொள்ளத்தேவை இல்லை. வங்கித்துறையை பொறுத்தவரை தொழில்நுட்பம் தான் மாற்றத்தை உருவாக்கும். புதிய நிறுவனங்கள் எப்போதும் போட்டி அல்ல என்று ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சாந்தா கொச்சார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

எந்த துறையிலும் மாற்றம் அல்லது வியாபாரம் குறைவது தொழில்நுட்பம் காரணமாகத்தானே தவிர புதிய நிறுவனங்களால் அல்ல என்பது என் எண்ணம். புதிய நிறுவனங்கள் பற்றிய கவலைப்படுவதைவிட, தற்போது தொழில் நுட்பம் எங்கு செல்கிறது என்பது பற்றிய தெரிந்துகொள்ளலாம். புதிய நிறுவனங்கள் மீது அச்சம் கொள்வதால் நீண்ட நாளைக்கு இந்த தொழிலில் இருக்க முடியாது. தொழில்நுட்பம் வேகமாக மாறிவரும் போது, அந்த மாற்றத்துக்கு ஏற்ப வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தற்போது இருக்கும் எங்களது தொழில்கள், அடுத்த வருடமும் இதே முறையில் இருக்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. வங்கிகள் பிஸினஸ் மாடல் மற்றும் நடைமுறைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்பதற் காக ஐசிஐசிஐ வங்கி தனியாக ஒரு குழுவை அமைத்திருக் கிறது. இந்த குழு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது குறித்தும் வேலை செய்து வருகிறது என்று கூறினார்.

ஆனால் பேமெண்ட் வங்கிகளுக்கு கொள்கை அளவில் அனுமதி கொடுத்த போது எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.

பேமெண்ட் வங்கிகள் கவலை தருகின்றன. இந்த வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க முடியும் என்பதால், எங்களை போன்ற வங்கிகளுக்கு சேமிப்பு கணக்குகளில் முதலீட்டாளர்கள் பணம் வைத்திருப்பது குறையும் என்று கடந்த ஆகஸ்ட்டில் அவர் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in