Published : 20 May 2021 10:51 AM
Last Updated : 20 May 2021 10:51 AM

கரோனா சூழலை பயன்படுத்தி பருப்பு பதுக்கல்?- நடவடிக்கை எடுக்க பியூஷ் கோயல் உத்தரவு

மாநிலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலையை தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளிடம் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கண்காணிப்பது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், விலைகள் நிலையாக இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.

கோவிட் சூழலை சாதகமாக பயன்படுத்தி பருப்பு ஆலை தொழில் அதிபர்கள், மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் யாராவது அத்தியாவசியப் பொருட்களை பதுக்கினால் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார்.

பருப்புகளின் எளிதான விநியோகத்துக்காக, இறக்குமதி கொள்கையை வர்த்தக அமைச்சகம் சமீபத்தில் மாற்றியது. எந்த பொருளும், எப்போதும் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

பருப்புகளின் விலையை வார அடிப்படையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கண்காணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பருப்பு மில் அதிபர்கள், மொத்த வியாபாரிகள், இறக்குமதியாளர்கள் வைத்திருக்கும் இருப்புகளின் விவரத்தை தெரிவிக்க ஆன்லைன் தரவு பக்கம், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

பருப்புகளை கொள்முதல் செய்யும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பருப்புகளை கொள்முதல் செய்வதற்கான வசதிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இது விவசாயிகள் நீண்ட காலத்துக்கு பருப்புகளை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் என நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x