

வெள்ளத்தால் சேதம் அடைந்த வீடுகளை புதுப்பிக்க வேறு வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தாலும் ரூ.25 லட்சம் வரை
இதுகுறித்து, பெடரல் வங்கியின் துணை பொது மேலாளர் கே.சீனிவாசன், உதவி பொது மேலாளர் கே.சி.தாமஸ் ஆகியோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேதம் அடைந்த தங்களது வீடுகளை புதுப்பிக்க பெடரல் வங்கி
இக்கடனுக்கு 9.68 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். இக் கடனை 10 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தலாம். மேலும், இக்கடனுதவி பெற ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், இக்கடன் உதவியை பெற விண்ணப்ப பரிசீலனைக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ளவர் களுக்கு இக்கடனுதவி திட்டம் பொருந்தும்.
கூடுதல் விவரங்களுக்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள எங்கள் வங்கிக் கிளைகளை அணுகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.