

சில்லரை வர்த்தகத்தில் மிகவும் பிரபலமான, பழமையான நிறுவ னமான ஸ்பென்ஸர்ஸ் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் நுழைகிறது. ஆன்லைன் வர்த்தக நிறுவனம் >meragrocer.com ஐ ஸ்பென்ஸர்ஸ் கையகப்படுத்தி யுள்ளது.
இதன்மூலம் ஆன்லைன் வர்த்தக சந்தையில் 10 சதவீதத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிடித்துவிட முடியும் என ஸ்பென் ஸர்ஸ் நம்புகிறது. ஸ்பென்ஸர் ஸின் துணை நிறுவனமாக மேராகுரோஸர்.காம் நிறுவ னம் செயல்படும். இது ஸ்பென் ஸர்ஸின் ஆன்லைன் வர்த்த கத்தை கவனிக்கும்.
தற்போது குர்காவ்ன் மற்றும் டெல்லியில் ஆன்லைன் வர்த்தக சேவையை மேராகுரோசர்ஸ் அளிக்கிறது. இது படிப்படியாக பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப் படும் என்று ஸ்பென்ஸர்ஸ் நிறுவன விற்பனை பிரிவுத் தலைவர் சாஷ்வத் கோயங்கா தெரிவித்துள்ளார்.