இஎம்ஐ தொகை: சென்னை மக்களுக்கு சலுகை- ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி அறிவிப்பு

இஎம்ஐ தொகை: சென்னை மக்களுக்கு சலுகை- ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னையில் வெள்ளம் ஏற்பட் டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல பேர் இஎம்ஐ தொகையை உரிய காலத்திற்குள் கட்ட முடியாத சூழல் உருவாகி யுள்ளது.

நேற்று ஐசிஐசிஐ வங்கி சென்னை வாடிக்கையாளர்கள் நவம்பர் மாதத்திற்குரிய இஎம்ஐ தொகையை தாமதமாக செலுத்தினால் அபராத தொகை விதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. மேலும் இந்தக் காலக்கட்டத்தில் பணம் இல்லாமல் காசோலை திரும்பினாலும் எந்தக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டது என்று ஐசிஐசிஐ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹெச்டிஎப்சி வங்கி சென்னை யில் சில இடங்களில் சில்லரை விற்பனை மையங்களை (பிஓஎஸ்) அமைத்துள்ளது. மயிலாப்பூர் ஆர்.கே சாலை மற்றும் கோபால புரத்திலும் இயங்குகிறது. மக்கள் தங்களது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் மேலும் 5-6 இடங்களில் இதுபோன்ற விற்பனை யகங்களை ஏற்படுத்த இருக்கிறோம் என்று ஹெச்டிஎப்சி கூறியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஹெச்டிஎப்சி வங்கி மழையால் பாதிக்கப்பட்ட வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் நவம்பர் மாதத்துக்குரிய இஎம்ஐ தொகையை தாமதமாக கட்டினால் அபராத தொகை கிடையாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வங்கி சேவையை துவங்குமாறு நிதியமைச்சகம் கேட்டுக்கொண்டது. ஏடிஎம் மற்றும் மற்ற சேவைகளை விரைவில் வழங்குமாறும் அனைத்து வங்கி களையும் கேட்டுக் கொண்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து வங்கிகளும் இன்று திறக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அதிக நேரம் இயங்க இருக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்யு மாறு அனைத்து பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடமும் நிதியமைச்சகம் கேட்டுக் கொண் டது.

ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஏஜெண்ட் மற்றும் விற்பனை ஊழியர்கள் மூலம் சென்னையில் அனைத்து வாடிக்கையாளர்களும் நலமுடன் உள்ளார்களா என்று சரிபார்க்க கூறியிருக்கிறது. சென்னையில் 1.5 லட்சம் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு உள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in