2030-க்கு பிறகு மூன்றாவது பெரிய பொருளாதாரம் இந்தியா

2030-க்கு பிறகு மூன்றாவது பெரிய பொருளாதாரம் இந்தியா
Updated on
1 min read

2030-ம் ஆண்டுக்கு பிறகு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த தொழில் பொருளாதார ஆய்வறிக்கை மையம் (சிஇபிஆர்) தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டில் காமன்வெல்த் நாடுகளில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். அப்போது இங்கிலாந்து பொருளாதாரத்தை விட இந்தியா பெரியதாக இருக்கும்.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

2029-ம் ஆண்டு உலகின் பெரிய பொருளாதாரமாக சீனா இருக்கும். அமெரிக்கா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும். 2030-ம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 10,133 பில்லியன் டாலராக இருக்கும். அதே காலகட்டத்தில் அமெரிக்க பொருளாதாரத்தின் மதிப்பு 32,996 பில்லியன் டாலராகாவும், சீன பொருளாதாரம் 34,338 கோடி டாலராகவும் இருக்கும். இங்கிலாந்து நான்காவது இடத்தையும், பிரேசில் ஐந்தாவது இடத்தையும் பிடிக்கும். தற்போது ஜி8 நாடுகளில் பட்டியலில் உள்ள பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அந்த பட்டியலில் இருந்து வெளியேற்றப்படும் சூழல் உருவாகும்.

இந்த இடத்தில் இந்தியா மற்றும் பிரேசில் இடம்பிடிக்கும். இல்லையெனில் அந்த பட்டியலை ஜி10 என்று மாற்ற வேண்டி இருக்கும். இந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் சிறப்பாக செயல்படும் நாடாக இங்கிலாந்து இருக்கும். தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் பிரான்ஸ் 2030-ம் ஆண்டு 9-வது இடத்துக்கு தள்ளப்படும் என்று இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள் ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in