Published : 11 May 2021 11:06 AM
Last Updated : 11 May 2021 11:06 AM

தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.4520 ஆக விற்பனையாகி வருகிறது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.4520க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.36160க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39032க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளி 1 கிராம் ரூ.76.80க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,800 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x