

தற்போது 6.6 லட்சம் கோடி டாலர் (10,000 கோடி டாலர்) மதிப்புள்ள டாடா குழுமம் இன்னும் 15 வருடங் களில் 23 லட்சம் கோடி டாலர் (35,000 கோடி டாலர்) குழுமமாக உயர திட்டமிட்டு வருகிறது என்று டாடா குழுமத்தின் பிராண்ட் பிரிவு தலைவர் முகுந்த் ராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
15 வருடங்களுக்கு முன்பு 53,000 கோடி ரூபாய் (800 கோடி டாலர்) நிறுவனமாக இருந்தோம். ஆனால் இப்போது ரூ.6.6 லட்சம் கோடி (10,000 கோடி டாலர்) நிறுவன மாக உயர்ந்திருக்கிறோம். அடுத்த 15 வருடங்களில் 23 லட்சம் கோடி டாலர் நிறுவனமாக டாடா குழு மத்தை உயர்த்த திட்டமிட்டிருக் கிறோம். இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்த இலக்கை அடைய ஏற் கெனவே நாங்கள் இருக்கும் தொழிலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் புதிய தொழிலில் உள்ள நிறுவனங்களை கையகப் படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும் நிறுவனங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக் கிறோம். குறிப்பாக டிஜிட்டல் துறையில் முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.
2025-ம் ஆண்டு உலகின் முக்கிய மான 25 குழுமங்களில் டாடா குழு மமும் இடம்பெற வேண்டும் என்றால் அந்த சமயத்தில் 35,000 கோடி டாலர் குழுமமாக இருக்க வேண்டும்.
2025-ம் ஆண்டு தொலை நோக்கு பார்வை திட்டத்தின் படி உலகின் மதிப்பு மிக்க 25 நிறுவனங் களுக்குள் வர டாடா குழுமம் திட்டமிட்டிருக்கிறது.
டாடா குழுமத்தின் வளர்ச்சியை பற்றி பேசும் போது 2000-ம் ஆண்டு டாடா குழுமம் இந்தியாவை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனமாக இருந்தது. அப்போது டாடா குழுமத்தின் வருமானத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைப் பது 20 சதவீதம் மட்டுமே. 15 வருடங்களுக்கு பிறகு இப்போது குழுமத்தின் மொத்த வருமானத்தில் 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து வருகிறது.
டாடா குழுமத்தின் பட்டியலிடப் பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் ஆகிய இரு பிரிவு களிலும் வளர்ச்சி இருக்கிறது. குழுமத்தின் முன்னாள் தலைவ ரான ரத்தன் டாடாதான் குழுமத்தின் இப்போதைய வளர்ச்சிக்கு அடித் தளம் இட்டவர். அவர் இல்லை என்றால் டாடா குழுமம் இப்போது இருக்கும் நிலையில் இருக்குமா என்பது சந்தேகமே.
வருங்காலத்தில் எந்த துறையில் வளர்ச்சி இருக்கும் என்பது இப் போது கணிக்க முடியாது. ஆனால் வளர்ச்சி உள்ள துறைகளில் நிறுவனங்களை கையகப்படுத்தும் துணிவினை கொடுத்தற்கு ரத்தன் டாடாவுக்கு நன்றி. கடந்த காலங் களில் நிறுவனங்களை கையகப் படுத்தியதியன் மூலம் கிடைத்த அனுபவங்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவோம்.
எங்களுடைய பல நிறுவனங் களில் கணிசமான தொகை இருக்கிறது. தேவை, பொருளாதார சுழற்சி ஆகியவற்றை பொறுத்து நிறுவனங்களை கையகப்படுத்து தல் இருக்கும். கையகப்படுத்துதல் தவிர ஏற்கெனவே உள்ள தொழில் களிலும் முதலீடு செய்ய தயாராக இருக்கிறோம். சீனா உள்ளிட்ட புதிய சந்தையில் விரிவடைய திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.
டாடா குழுமத்தில் 100க்கும் மேற் பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் 29 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த குழுமம் செயல்பட்டு வருகிறது.
சிஎஸ்ஆர் வரி போன்றதே
புதிய கம்பெனி சட்டத்தின் படி நிறுவனங்கள் சமூக சேவைக்காக (சிஎஸ்ஆர்) நிகர லாபத்தில் 2 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் சமூக சேவையை கட்டாயமாக்குவது என்பது வரி செலுத்துவது போல என்று டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
சமூக சேவை என்பது மனதில் இருந்து வரவேண்டுமே தவிர கட்டாயப்படுத்த முடியாது. அதே சமயதில் இந்த விதி மூலம் பெரிய தொகை நிறுவனங்களிடம் உள்ளது. எந்த துறையில் அல்லது திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று அரசு அடையாளம் காணவேண்டும் என்றார்.