

செல்போன் தயாரிப்பில் ஈடுபட் டுள்ள இந்தியாவைச் சேர்ந்த லாவா நிறுவனம் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை பணி களுக்கு ரூ. 200 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. 18 மாதங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்துக்கு 250 பணியாளர்கள் இந்தியா விலும் 550 பணியாளர்கள் சீனா விலும் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள் ளனர். இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்றுவதற்காக அதிக முதலீடு மேற்கொள்ளப் படுவதாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக் குநர் ஹரி ஓம் ராய் தெரி வித்துள்ளார். முதலீடு அதிகரிக் கும்போது பணியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அவர் மேலும் குறிப் பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் லாவா இந்தியா நிறுவனம் ரூ. 2,615 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. ஏழு ஆண்டுகளில் இந்தத் தொகை முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. இந்தி யாவில் ஏற்கெனவே உள்ள ஒரு செல்போன் தயாரிப்பு தொழிற் சாலையுடன் கூடுதலாக மேலும் ஒரு ஆலை தொடங்கப்போவ தாக அறிவித்தது. இரண்டாவது ஆலை உற்பத்தியைத் தொடங்கும்போது செல்போன் உற்பத்தி மாதத்துக்கு 1.8 கோடியாக உயரும் என்று ராய் குறிப்பிட்டார்.
செல்போன் சந்தையில் 4.7 சதவீத விற்பனையைப் பிடித்து ஐந்தாவது இடத்தில் லாவா நிறுவனம் உள்ளது. சாம்சங் 24 சதவீதம், மைக்ரோமேக்ஸ் 16.7 சதவீதம், லெனோவா (மோட்டரோலா) 9.5 சதவீத சந்தையைப் பிடித்துள்ளன.