

பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கிக்கு மத்திய அரசு ரூ. 2,229 கோடியை முதலீடாக அளித் துள்ளது. இத்தொகைக்கு ஈடாக வங்கி பங்குகளை அரசுக்கு அளிக் கும் என ஐடிபிஐ வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த 28-ம் தேதி வழங்கியது. ரூ. 2,228.99 கோடி முதலீடு செய்ய முன்னுரிமைப் பங்குகளை ஒவ்வொன்றும் ரூ. 75.28 விலையில் மொத்தம் 29.60 கோடி பங்குகளை வங்கி அரசுக்கு அளித்துள்ளது.