

இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் களை மோட்டரோலா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது. 2-ம் தலைமுறை மோட்டோ 360 கலெக்ஷன் என்ற பெயரில் 5 மாடல்களில் வாட்ச்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி யுள்ளது.
மோட்டரோலா நிறுவனத்தை லெனோவா நிறுவனம் கையகப் படுத்தியபிறகு இந்திய சந்தையில் இந்நிறுவனம் அறிமுகப் படுத்தும் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும். ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படும் வகையில் 5 மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் முறையாக மகளிர்க் கென்று இரண்டு மாடல்கள் பிரத்யேகமாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரி வித்துள்ளது. செல்போனை எடுக்கா மலேயே அனைத்து செயல் பாடுகளையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மேற்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.