

டெல்லியில் உள்ள கான் மார்க் கெட் வர்த்தக சங்கம் `முத்திரை மீறல்’ தொடர்பாக பாலிவுட் நடி கர் சல்மான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருகிறது. சல் மான் கான் தனது 50-வது பிறந்த நாளை முன்னிட்டு புதிததாக கான் மார்க்கெட் டாட் காம் என்ற ஆன்லைன் விற்பனை இணைய தளத்தை ரசிகர்களுக்காக ஆரம் பிக்க உள்ளதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும் இதை ஆரம்பிப்பதற்கான செயல்பாடுகள் நடந்து கொண் டிருக்கின்றன. ரசிகர்கள் அந்த இணையதளத்தில் சுய விவரங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
``இந்த ஆனலைன் விற்பனை இணையதள பெயருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கான் மார்க்கெட் என்ற பெயர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பிரபலமானது. சல்மான் கான் ஆரம்பிக்க உள்ள இந்த இணைய தளத்தால் எங்களது சந்தையின் பெயர் தவறான முறையில் பயன்படுத்தப்படும். இதனால் எங்களுக்கென்று உள்ள முத்திரை பாதிக்கப்படும்’’ என்று கான் மார்க்கெட் வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்சீவ் மெஹ்ரா தெரி வித்துள்ளார்.
``கான் மார்க்கெட் உலக தரத்தில் உள்ள பிராண்ட், தவிர உலக முழுவதும் இந்த பெயரை அறிவார்கள்.
சல்மான் கான் ஆன்லைன் விற்பனை இணைய தளத்தை ஆரம்பிப்பதற்கு முன் இதை கருத்தில் கொள்ள வேண்டும். நாங்கள் சல்மான் கானை சந்தித்து இணையதள பெயரை மாற்றச் சொல்லி கேட்க இருக்கிறோம். அவர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்’’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ``இந்த இணையதளம் பொருட்களுக்கு சலுகைகளை அறிவித்தால் மக்கள் எங்களிட மும் சலுகைகளை எதிர்பார்ப் பார்கள். இதனால் எங்களது வாடிக் கையாளர்களை இழக்க நேரிடும் மேலும் எங்களுக்கு பிரச்சி னையும் உண்டாகும்’’ என்று மெஹ்ரா தெரிவித்தார்.
கான் மார்க்கெட் 65 வருட பழமையான சந்தை. இங்கு 156 கடைகள் மற்றும் 35 உணவ கங்கள் இருக்கின்றன. சல்மானின் இணையதளத்தால் கடைக் காரர்கள் குழப்பத்திற்கு ஆளாக நேரிடும் என்று வர்த்தகர்கள் சங்கம் கூறுகின்றன.