Published : 07 Dec 2015 09:49 AM
Last Updated : 07 Dec 2015 09:49 AM

அந்நிய நேரடி முதலீடு: மொரீஷியஸை முந்தியது சிங்கப்பூர்







இந்தியாவுக்கு வரும் அந்நிய நேரடி முதலீடு பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது. மொரீஷிய ஸில் இருந்து வரும் முதலீட்டை விட சிங்கப்பூரில் இருந்து அதிக முதலீடு இந்தியாவுக்கு வந்திருக் கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில்) சிங்கப்பூரில் இருந்து 43,096 கோடி ரூபாய் (669 கோடி டாலர்) அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது. இதே காலத்தில் மொரீஷியஸில் இருந்து 23,490 கோடி ரூபாய் இந்தியாவுக்கு வந்திருக்கிறது. தொழில் கொள்கை மேம்பாட்டு வாரியம் (டிஐபிபி) இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த வருடம் இதே காலத்தில் 241 கோடி டாலர் முதலீடு மட்டுமே இந்தியாவுக்கு வந்தது. சில விதிமுறைகள் காரணமாக மொரீஷியஸை விட சிங்கப்பூரையே முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள் என்று வரித்துறை நிபுணர் கிருஷ்ணன் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் சிங்கப்பூரில் இருந்து 598 கோடி டாலரும், 2014-15ம் நிதி ஆண்டில் 674 கோடி டாலர் முதலீடும் இந்தியாவுக்கு வந்தது. கடந்த 2000-ம் ஏப்ரல் முதல் 2015 செப்டம்பர் வரை இந்தியாவுக்கு வந்திருக்கும் அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூரின் பங்கு 15 சதவீதமாகும். ஆனால் இதே காலத்தில் மொரிஷியஸில் இருந்து இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு 34 சதவீதம் ஆகும்.

நடப்பு நிதி ஆண்டில் சாப்ட்வேர் மற்றும் ஹார்வேர்டு பிரிவில் 305 கோடி டாலர், வர்த்தக பிரிவில் 230 கோடி டாலர், சேவை மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் 146 கோடி டாலர் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 65.9 கோடி டாலர் அந்நிய முதலீடு இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x