பாதுகாப்பான பயணம்: அரசுடன் இணைந்து ஹூண்டாய் பிரசாரம்

பாதுகாப்பான பயணம்: அரசுடன் இணைந்து ஹூண்டாய் பிரசாரம்
Updated on
1 min read

இந்தியாவில் கார்கள் தயாரிப்பில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் ஹூண்டாய் நிறுவனம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்துடன் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசா ரத்தைத் தொடங்கியுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்நிறுவ னத்தின் பிரசாரத்தை மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான பயணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (Safe Move Traffic Safety Campaign) என்ற இந்த பிரசாரத்தை மக்கள் பலரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு ரோபோ பொம்மையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பான பயணம், சூழல் பாதிப்பில்லாத பயணம், மகிழ்ச்சியான பயணம், சுலபமான பயணம் ஆகிய நான்கும்தான் நிறுவனத்தின் அடிப்படை நோக்கமாகும்.

நிறுவனத்தின் சமூக பொறுப் புணர்வு (சிஎஸ்ஆர்) பணிகளிலும் இவைதான் முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றன.

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச் சகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மத்தியில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். சிறுவர்களைக் கவர்வதற்காக ரோபோ பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோபோ கார் குறித்த அனிமேஷன் படத் தையும் அமைச்சர் வெளி யிட்டார்.

மொத்தம் 26 தொடர் களைக் கொண்டதாக இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இது ஒளிபரப்பாகும்.

டிவி தொடர் விழிப்புணர்வு தவிர பள்ளிகள் மற்றும் குடியிருப்பு நல சங்கங்கள் மூலமும் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தப் பணிகள் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட 5 நகரங்களில் மேற் கொள்ளப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in