

ஃபேஸ்புக் அலுவலகம் அமைந்துள்ள மென்லோ பார்க் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10,000 டாலர் கொடுத்துவருகிறது. இந்த சலுகையை பெறுவதற்கு ஃபேஸ்புக் அலுவலகத்தில் இருந்து 16 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வீடு வாங்கி இருக்க வேண்டும். இந்த தகவலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். சில ஃபேஸ்புக் பணியாளர்கள் 15,000 டாலருக்கு மேல் பெற்றிருக்கிறார்கள்.
ஃபேஸ்புக் இந்த சலுகையை அறிவித்ததும், அருகே உள்ள வீடுகளின் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்திவிட்டதாக ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறு வனமான ட்ருலியா டாட்காம் (Trulia.com) தெரிவித்துள்ளது. தவிர அருகில் உள்ள குடும்பங் களும் இதுபோன்ற சலுகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் போல இதர டெக்னாலஜி நிறுவனங்களும் இதேபோல பல சலுகைகளை வழங்கி வருகிறன. பணியாளர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு சொகுசு வாகன சேவையை நிறுவனம் அளிக்க வேண்டி இருக்கும். இப்போது அந்த வாகனங்களின் ஓட்டுனர்கள் சங்கம் தொடங்கிவிட்டனர். தவிர அலுவலகம் அருகே வீடு இருக்கும் போது பணியாளர்கள் அதிக நேரம் அலுவலகத்தில் இருப்பார்கள் என்பது கணிப்பாகும்.
மூன்று வருடங்களுக்கு முன்பு 60 நிமிட நேரத்தில் கடக்க கூடிய தூரத்தை இப்போது கடக்க 90 நிமிடங்கள் தேவை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட வாகனப்பெருக்கமே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகும்.