

பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மானியத்தில் ஒரு சதவீதத்தை குறைக்கலாம் என்று நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர் இலா பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.
என்னை பொறுத்தவரை நிதி சீரமைப்பு செய்வது கடினமாக இருக்காது என்று ஃபிக்கி நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் அவர் தெரிவித்தார். நாம் பல மானியங்களை கொடுத்து வருகிறோம். இதில் பல ஓட்டைகள் இருக்கிறது, மேலும் பல திட்டங்கள் சேர வேண்டிய மக்களுக்கு போய்சேரவில்லை.
அரசியல் ரீதியாக துணிச்சலான முடிவு எடுக்கும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) ஒரு சதவீதம் வரை குறைக்க முடியும் என்றார். பொருளாதாரம் மந்தமாக இருக்கிறது, பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நிதி சீரமைப்பு கடினமாக இருந்தாலும் அது முடியாதது அல்ல என்றார் அவர்.
ஏற்ற இறக்கம் என்பது பொருளாதாரத்தில் சாதாரணமாக நடக்க கூடியது. ஆனால் அதீத ஏற்ற இறக்கங்கள் நாட்டின் நீண்ட கால ஜி.டி.பி. வளர்ச்சியை பாதிக்கும் என்றார்.