2006-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தியது

2006-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தியது
Updated on
2 min read

சந்தை வல்லுநர்களின் கணிப்புக்கு ஏற்ப அமெரிக்க மத்திய வங்கி (பெடரல் ரிசர்வ்) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. 2007-09 வரையிலான நெருக்கடி காலத்தில் இருந்து மீண்டு வருவ தற்காக பல சலுகைகள் கொடுக்கப் பட்டு வந்தன. இப்போது அமெரிக்க பொருளாதாரம் உயரும் என்ற நம்பிக்கை காரணமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, வருங் காலத்திலும் சிறப்பாக செயல்படும் என்று வட்டி விகித நிர்ணய குழு கருதுகிறது. அதனால் வட்டி விகி தத்தை உயர்த்துவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெனட் ஏலன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வேலையில் லாதவர்களின் எண்ணிக்கை 5 சத வீதமாகக் குறைந்ததன் காரணமாக வட்டி விகித நிர்ணய குழுவில் இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தவிர பணவீக்க விகிதம் நடுத்தர காலத்தில் 2 சதவீத அளவுக்கு உயரும் என்ற நம்பிக்கை காரணமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக் கிறது.

வட்டி விகித உயர்வு இப்போதுதான் தொடங்கப் பட்டிருக்கிறது. இனி படிப்படியாக வட்டி விகிதம் உயர்த்தப்படும். பணவீக்கம் எப்படி உயர்கிறது என்பதை பொறுத்து அடுத்த வட்டி விகித உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார கணிப்புகளில் பெரிய மாற்றங்கள் இல்லை. அடுத்த வருடத்தில் வேலையில் லாதவர்களின் எண்ணிக்கை 4.7 சதவீதமாகவும், பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட் டிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்து முடிந்தன.

மக்கள் செய்யும் செலவுகளைக் குறைப்பதோ அல்லது நிறுவனங் கள் முதலீடு செய்வதைக் குறைப்பதோ மத்திய வங்கியின் நோக்கம் அல்ல. இப்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருந்தாலும் இப்போது கூட வட்டி விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அதனால் மக்கள் செய்யும் செய்யும் செலவுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று என்று ஜெனட் தெரிவித்தார்.

இந்தியா தயாராக உள்ளது

வருங்காலத்தில் வட்டி விகிதம் எப்படி உயர்த்தப்படும் என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் இதனால் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்தியா தயாராக இருக்கிறது. நம்முடைய நிதி நிலைமை, ஜிடிபி வளர்ச்சி உள்ளிட்டவற்றை பார்க்கும்போது இந்தியா தயாராக இருப்பதாக நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க் கப்பட்ட நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகள் தங்களுடைய பொருளாதார கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ள முடியும். வட்டி விகிதம் குறைந்த அளவுதான் உயர்த்தப் பட்டுள்ளது. இதனை எதிர் கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க பொருளாதாரம் வளரும் என்பது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல செய்தி என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினாலும் அதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் வராது. பணவீக்கம் குறைவு, நிதிப்பற்றாக்குறை குறைவு போன்ற பல காரணங் களால் எந்த பாதிப்பும் இருக்காது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம் உயர்த்தப் பட்டதால் இந்தியாவில் இருந்து அந்நிய முதலீடு வெளியேறும். இதனால் பங்குச்சந்தையில் சிறிய சரிவு ஏற்படும். ஆனால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 என்ற அளவில் இருக்கிறது. ரூபாய் மதிப்பு இதே நிலையிலே இருக்கும். ரூபாய் மதிப்பு 70 என்ற நிலைக்கு சரிவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in