

சமீபத்தில் வெளியிட்ட இரண்டு பொது பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அல்கெம் லேப் நிறுவனம் 1,350 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட முடிவு செய்திருந் தது. ஆனால் 33 மடங்குக்கு மேல் முதலீட்டாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் குவிந்தன.
அதேபோல டாக்டர் லால்பாத்லேப் நிறுவனம் 638 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட முடிவு செய்திருந்தது. இந்த நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முதலீட்டாளர்களிடம் இருந்து 20 மடங்குக்கு மேல் விண்ணப்பம் குவிந்திருக்கின்றன.
கடந்த ஆறு வர்த்தக தினங்களாக சென்செக்ஸ் 1133 புள்ளிகள் சரிந்திருந்த போதிலும், இந்த இரண்டு ஐபிஒகளுக்கு சிறுமுதலீட் டாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.
நடப்பு ஆண்டில் இதுவரை 18 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டிருக்கின்றன. இதுவரை 12,000 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளன. கடந்த 4 வருடங்களில் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட அதிக தொகை இதுவாகும்.