

லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதற்கு முன்னதாக எல் அண்ட் டி நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி பொறுப்பை வகித்தவர்.
எல் அண்ட் டி மியூச்சுவல் பண்ட் இந்தியா நிறுவனத்தின் இணை இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார். மேலும் எல் அண்ட் டி பவர் டெவலப்மெண்ட் நிறுவனத்தின் குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
1974-ல் எல் அண் டி நிறுவனத்தில் தனது பணியை தொடங்கியவர். தற்போது இந்நிறுவனத்தின் நிரந்தர இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் மியூச்சுவல் பண்ட் தேசிய குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
இந்திய வர்த்தக கூட்டமைப்பான பிக்கியின் நிறுவனங்களின் நிதிக் குழுவின் துணைத்தலைவராகவும் இருந்தவர்.
சார்ட்டட் அக்கவுண்டன்ட் மற்றும் சட்ட படிப்பில் இளங்கலை பட்டமும் முடித்துள்ளார்.