

மகிளா வங்கியை வேறு வங்கி யுடன் இணைப்பது குறித்து எந்த தகவலும் மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை என்று மகிளா வங்கியின் செயல் இயக்குநர் ஸ்வாதி தெரிவித் திருக்கிறார்.
2013-ம் ஆண்டு தொடங்கப் பட்ட மகிளா வங்கியை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்போவதாக செய்தி கள் வெளியான நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: வங்கி இணைப்பு குறித்து பல தகவல்கள் வருகின்றன. ஆனால் அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. வங்கி வழக்கமான முறையில் செயல்பட்டு வருகிறது.
விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். சமீபத்தில் கூட ஒரு கிளையைத் தொடங்கினோம். இப்போது 85 கிளைகளுடன் எங்கள் வங்கி செயல்பட்டு வருகிறது.
நடப்பு நிதி ஆண்டு முடிவ தற்கு 110 கிளைகள் தொடங்க இலக்கு நிர்ணயம் செய்திருக் கிறோம்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில் 14 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபம் ஈட்டி இருக்கிறோம். வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர், ஏற்கெனவே பணியாற்றிய வங்கிக்கு இன்னும் சில மாதங்களில் செல்ல இருக்கிறார்கள்.
அதனால் உடனடியாக அவர் களுக்கு மாற்றான அதிகாரிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கி/நிறுவ னங்களில் இருந்து சுமார் 100 மூத்த அதிகாரிகள் மகிளா வங்கி பணிக்கு வந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அவர்கள் வெளியேறுவார்கள்.
இப்போதைக்கு படிநிலை 4 வரை உள்ள ஊழியர்கள் வங்கியின் ஊழியர்கள் ஆவார்கள். அந்த படிநிலைக்கு மேல் உள்ள ஊழியர்கள் மற்ற பொதுத்துறை வங்கி/நிறுவனங்களிடம் இருந்து அயல்பணிக்கு வந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.