

நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சர்வதேச அளவுக்கு போட்டியிடும் வகையில் உயர்த்த அரசு சிறப் பான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
முதல் கட்டமாக இந்நிறுவனங் களின் திறனை மேம்படுத்தும் வகையில் தேசிய உற்பத்தி போட்டித் திட்டம் (என்எம்சிபி) எனும் திட்டத்தை அரசு செயல் படுத்த உள்ளதாக மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரி வித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் எழுத்துமூலமாக அளித்த பதிலில் அவர் மேலும் கூறியதாவது:
நாட்டின் உற்பத்தித் துறையில் சிறு, குறு, மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) துறையினரின் பங்களிப்பு கணிசமானதாகும்.
பெருமளவில் வேலை வாய்ப்பை அளிக்கும் இத் துறையின் திறனை சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி யிடும் அளவுக்கு உயர்த்த வேண்டி யுள்ளது.
அதற்காக தேசிய அளவில் போட்டிகளை நடத்து வதன் மூலம் திறன் மேம்படும். இந்த போட்டிகள் 9 பிரிவுகளில் நடத்தப்படும்.
அதாவது அதிக உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், தொழில் நுட்பம் மற்றும் தரமான உற்பத்தி, தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது, வடிவமைப்பு, சந்தைப்படுத்துவது, காப்புரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் துவது, பார் கோட் எனப்படும் குறியீடு அறிமுகப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்த தொழில் நுட்பங்களை நாடு முழுவதும் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்குத் தேவைப்படும் நிதியானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் மூலம் அந்தந்த துறைகளின் வாயிலாக அளிக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளின் மூலமாக தேவையான நிதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.