நடப்பாண்டில் ஐபிஓ மூலம் 21 நிறுவனங்கள் ரூ.13,600 கோடி திரட்டின

நடப்பாண்டில் ஐபிஓ மூலம் 21 நிறுவனங்கள் ரூ.13,600 கோடி திரட்டின
Updated on
1 min read

மும்பை 2015-ம் ஆண்டில் பொதுப் பங்கு வெளியீடு மூலம் (ஐபிஓ) 21 நிறுவனங்கள் 13,600 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. இது கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமானதாகும். இதன் மூலம் கடந்த சில வருடங்களாக பொதுப் பங்கு வெளியீட்டில் நிலவி வந்த மந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.

14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ-க்கள் ஏற்கெனவே இறுதி நிலைக்கு வந்துள்ளன. மரபு சாரா எரிசக்தி துறை, லாஜிஸ்டிக்ஸ், பார்மா, எலெக்ட்ரானிக்ஸ், ஏர்லைன்ஸ் என பல்வேறு துறைகளில் பல நிறுவனங்கள் இந்த வருடம் ஐபிஓ-க்களை வெளியிட்டன. 21 நிறுவனங்களின் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட மொத்த நிதி 2010-ம் ஆண்டு திரட்டப்பட்ட தொகையை விட அதிகமானதாகும்.

இந்த வருடத்தில் வெளியிடப் பட்ட ஐபிஓக்கள் 60 சதவீதம் புதிய நிறுவனங்கள். இண்டர்குளோப் ஏவியேஷன் நடத்தி வரும் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ இந்த வருடத்தின் நட்சத்திர நிறுவனமாக இருக்கிறது. 3,017 கோடி ரூபாய் ஐபிஓ மூலம் திரட்டியுள்ளது.

இந்த வருடத்தில் காபி டே நிறுவனம் 1,150 கோடி ரூபாய் ஐபிஓ நிதி திரட்டியிருக்கிறது. அல்காம் லேபாரட்டரீஸ் ரூ.1,350 கோடி திரட்டியுள்ளது. ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ.1,020 கோடி திரட்டியிருக்கிறது. இந்த வருடத்தில் சில நிறுவனங்கள் வெளியிட்ட ஐபிஓ சிறப்பாக செயல்படவில்லை. நிறைய நிறுவனங்களின் ஐபிஓ சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன என்று கோட்டக் செக்யூரிட்டீஸ் நிர்வாக துணைத் தலைவர் திவிக்ராம் காமத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in