Published : 18 Dec 2015 09:51 AM
Last Updated : 18 Dec 2015 09:51 AM

இந்துலேகாவை வாங்கியது ஹெச்யுஎல்

எப்.எப்.சி.ஜி. துறையின் முக்கிய நிறுவனமான ஹெச்சியுல் இந்துலேகா மற்றும் வயோதா ஆகிய பிராண்ட்களை வாங்கியது. மாசான்ஸ் (Mosons) குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனங்களை 330 கோடி ரூபாய்க்கு ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) வாங்கி இருக்கிறது. அழகு சாதன பிரிவை பலப்படுத்துவதற்கு இந்த இணைப்பு உதவும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2009-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. கேரளம், தமிழ் நாடு, கர்நாடகம் உள்ளிட்ட தென் இந்திய சந்தையில் இந்த நிறுவனத்துக்கு கணிசமான சந்தை உள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் மகாராஷ்டிர சந்தையில் களம் இறங்கியது. கடந்த மார்ச் 2015-ம் நிதி ஆண்டுடன் முடிவடைந்த காலத் தில் நிறுவனத்தின் வருமானம் ரூ. 100 கோடியாக இருக்கிறது.

இந்த இணைப்பு முழுமையாக நடைபெறும் வரையில் மாசன்ஸ் குழுமம் தொழிலை கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு முடிவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும். இந்த இணைப்பால் கேச பராமரிப்பு பிரிவு பலமாகும் என்று ஹெச்யுஎல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சஞ்ஜீவ் மேத்தா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x