

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மூலம் கடந்த நிதி ஆண்டில் மத்திய அரசுக்கு 21,054 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது. இந்த தகவலை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகமாகும். கடந்த 2013-14-ம் நிதி ஆண்டில் இந்த வரி மூலம் 17,330 கோடி ரூபாயும், 2012-13ம் நிதி ஆண்டில் 16,401 கோடி ரூபாயும் மத்திய அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டில் 10,950 கிலோமீட்டர் அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என்று மற்றொரு கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.