

வோடபோன் இந்தியா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. 2015 ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதற்கு முன்பு நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக பணியாற்றியவர்.
ஹட்ச் நிறுவனத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
2012-ம் ஆண்டிலிருந்து 2015 மார்ச் மாதம் வரை சபேரிகாம் நிறுவனத்தில் நிர்வாக ரீதியில் எவ்வித பொறுப்புகளும் இல்லாத இயக்குநராக இருந்தவர்.
தொலைத்தொடர்பு துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர்.
பெப்ஸி நிறுவனத்துக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். பங்களாதேஷ் பிரிவிற்கு தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர்.
இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பி.டெக் பட்டமும், கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ படிப்பும் முடித்துள்ளார்.