

வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டெண்ணில் 1243 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 814 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
2021 மார்ச் மாதத்திற்கான, வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் மற்றும் ஊரக தொழிலாளர்களுக்கான, 2021 மார்ச் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (அடிப்படை:1986-87=100), 2 மற்றும் 1 புள்ளிகள் குறைந்து முறையே 1035 மற்றும் 1043 புள்ளிகளாக உள்ளது.
இந்தக் குறியீட்டெண்ணின் ஏற்ற இறக்கங்கள், மாநிலங்கள் தோறும் மாறுபடுகின்றன. தமிழ்நாடு, வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டெண்ணில் 1243 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 814 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
கிராமப்புற தொழிலாளர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு 1229 புள்ளிகளுடன் குறியீட்டெண் பட்டியலில் முதலிடத்திலும், பிஹார் 839 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.