Last Updated : 19 Dec, 2015 10:23 AM

 

Published : 19 Dec 2015 10:23 AM
Last Updated : 19 Dec 2015 10:23 AM

உயிர்காக்கும் மருந்துகளின் விலை பல மடங்கு உயர்த்திய இளம் தொழிலதிபர் மார்ட்டின் ஷ்க்ரெலி கைது

உயிர் காக்கும் மருந்துப் பொருள் களின் விலையை பல மடங்கு உயர்த்திய தொழில் முனைவோர் மார்ட்டின் ஷ்க்ரெலியை பெடரல் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபண மானால் இவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.

32 வயதான மார்ட்டின், பங்குச் சந்தையில் ஹெட்ஜ் ஃபண்ட் மேலாளராக உள்ளார். தன்னை மிகச் சிறந்த தொழில் முனைவோராக முன்னிலைப் படுத்திக் கொள்வதில் இவர் மிகுந்த கவனம் செலுத்துவார். தன்னை தகுதி வாய்ந்த பிரம்மச்சாரி (the world’s most eligible bachelor) என்று ட்விட்டர் பக்கத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். இவர் மீது உயிர் காக்கும் மருந்துப் பொருள்களின் விலையை 50 மடங்கு உயர்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புரூக்ளின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவரை 50 லட்சம் டாலர் பிணைத் தொகையில் ஜாமீனில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நீதிமன்றத்திலிருந்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் வெளியேறி யுள்ளார் மார்ட்டின்.

இணையதளத்தில் இவரது கைது தொடர்பாக பல்வேறு கருத்து கள் வெளியாகியுள்ளன. பணத் துக்கு ஆசைப்படும் மோசமான வியாபாரி, இவரால் முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு கெட்ட பெயர் ஏற் பட்டுள்ளது என்று சிலர் குறிப்பிட் டுள்ளனர்.

இவர் தலைமைச் செயல் அதி காரியாக இருந்த ரெட்ரோபின் எனும் பார்மா நிறுவனத்தின் நிதியை சூறையாடியதாகக் குறிப்பிட்டுள்ள னர். 1.10 கோடி டாலர் தொகையை தனது வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனத்திலிருந்து இவர் அளித்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மார்ட்டின் மறுத்துள்ளதாகவும், திட்டமிட்டே சதிவலையில் இவர் சிக்க வைக்கப்பட்டுவிட்டதாக மார்ட்டினின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் டூரிங் பார்மசூடிக்கல்ஸ் என்ற நிறு வனத்தை உருவாக்கிய மார்ட்டின் அதில் 5.5 கோடி டாலர் முதலீடு செய்து டாராபிரிம் எனும் மருந்தை விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளார். அதன் பிறகு இந்த மருந்தின் விலையை 13.50 டாலரி லிருந்து 750 டாலராக உயர்த்தி யுள்ளார். ஒட்டுண்ணிகளால் மிகவும் அரிதாக ஏற்படும் டாக்ஸோபிளாஸ் மாசிஸ் எனும் நோய்க்கு இந்த மருந்து சிறந்த நிவாரணியாகும். இந்த நோய் பொதுவாக மகப்பேறு பெண்களைத் தாக்கும் அத்துடன் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் கள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளையும் இது தாக்கும்.

கடந்த மாதம் மற்றொரு புற்று நோய் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காலோ பியோஸ் பார்மசூடிக்கல்ஸ் நிறு வனத்தின் பெருமளவு பங்குகளை வாங்கி அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மார்ட்டின் பொறுப்பேற்றார்.

இவர் கைதான தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் பங்கு விலை பாதிக்கும் மேலாக சரிந்தது. இதனால் நிறுவனம் பங்கு வர்த்தகத்தை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x