

மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நாராயணா ஹிருதயலயா லிமிடெட் நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் பங்குச் சந்தையில் நுழைகிறது. இப்பங்குகள் வியாழக்கிழமை விற்பனைக்கு வருகிறது. இந்தப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 613 கோடியைத் திரட்ட முடிவு செய் யப்பட்டுள்ளது.
பங்குகளின் விலையை ரூ. 245 முதல் ரூ. 250 என இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இம்மாதம் 21-ம் தேதி வரை இப்பங்குகளில் முதலீடு செய்ய முடியும். மொத்தம் 14.4 சதவீத பங்குகள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஜேபி மார்கன் மொரீஷியஸ், அசோகா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் அம்பாதேவி மொரீஷியஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசமுள்ள பங்குகளை பொதுப் பங்கு விற்பனைக்கு அளிக்கின்றனர். பங்கு விற்பனைக்குப் பிறகு நிறுவனர்கள் வசம் 65 சதவீத பங்குகள் இருக்கும்.
2000-வது ஆண்டில் தொடங்கப் பட்ட இந்நிறுவனம் மொத்தம் 23 மருத்துவமனைகளை நிர்வகிக் கிறது. இது தவிர 8 இருதய மையங்கள் 24 முதன்மை மருத்துவ மனைகள் உள்ளிட்டவற்றை 31 நகரங்களில் நிர்வகிக்கிறது.
பங்கு வெளியீடு மூலம் திரட்டப்படும் தொகையில் ஒவ்வொன்றும் ரூ. 100 கோடி மதிப்பில் நான்கு புதிய மருத்துவ மனைகளைத் தொடங்க திட்ட மிட்டுள்ளது.