தங்க சேமிப்பு திட்டம்: மும்பை சித்தி விநாயகர் கோயில் 40 கிலோ தங்கத்தை சேமிக்க முடிவு

தங்க சேமிப்பு திட்டம்: மும்பை சித்தி விநாயகர் கோயில் 40 கிலோ தங்கத்தை சேமிக்க முடிவு
Updated on
1 min read

இந்தியாவின் அதிக செல்வமுள்ள கோயில்களில் ஒன்றான மும்பை சித்திவிநாயர் கோயிலுக்கு சொந்தமான 40 கிலோ தங்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்த தங்க சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

40 கிலோ தங்கத்தை தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்வதன் மூலம் கோயில் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 69 லட்ச ரூபாய் வட்டியாக கிடைக்கும். இது திருப்பதி மற்றும் ஷீரடி கோயில்களில் உள்ள தங்கத்தை, தங்க சேமிப்பு திட்டத்தில் சேமிப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த தங்க சேமிப்பு திட்டத்திற்கு 400 கிராம் சேமிப்பு மட்டுமே வந்திருந்தது. ஆனால் கணிப்புகளின் படி இந்தியாவில் 20,000 டன் அளவு தங்கம் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

விரைவில் கோயில் நிர்வாகம் தங்கத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொடுக்க இருக்கிறது. டெபாசிட் செய்யப்படும் தங்கத்தில் 10 கிராமுக்கு 25,000 ரூபாய் என்று மதிப்பிடப்படுகிறது. டெபாசிட் செய்யவுள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ 7.2 கோடியாகும்.

இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தங்கத்திற்கு 2 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி சித்தி விநாயகர் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 165 கிலோ தங்கம் உள்ளது. ஏற்கனவே 10 கிலோ தங்கத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டெபாசிட் செய்து வைத்துள்ளது. இதற்கு 1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

40 கிலோ தங்கத்தை உருக்குவதற்கு கோயில் நிர்வா கத்தின் உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டு மாநில அரசிடமும் அனுமதி வாங்கிவிட் டோம். இந்த சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கி யுள்ள நோயாளிகளின் மருத்துவ செலவுகளுக்காக பயன்படுத்த இருக்கிறோம் என்று கோயில் நிர்வாகத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்தார்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வில் செய்துள்ள சேமிப்பால் ஆண்டுக்கு 1.9 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்று நிர்வாகத்தின் கணக்கு அதிகாரி மேரஸ்வர் பகாடே தெரிவித் துள்ளார்.

தங்க சேமிப்பு திட்டம் மிக லாபகரமான திட்டம். அதனால் இந்த திட்டத்தின் கீழ் இன்னும் அதிகமாக டெபாசிட் செய்ய இருக்கிறோம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவோம் என்று கோயில் நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in