

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சர்வதேச பிரிவு தலைவராக பணியாற்றிய பிரசாத் திரிகுடம் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். கடந்த ஓராண்டில் இந்நிறுவனத் திலிருந்து முக்கியமான பொறுப்பு களிலிருந்து வெளியேறும் 12-வது நபர் இவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த வாரம்தான் இந்நிறுவனத்திலிருந்து பி.ஜி. னிவாஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இவர் விலகிய மறுநாளே நிறுவனத்தின் பங்கு விலை 7 சதவீத அளவுக்குச் சரிந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சந்தையை கவனித்துவந்த பிரசாத் பதவி விலகியிருப்பது நிறுவனத்தை மேலும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
இவரது பதவி விலகலை இன்ஃபோசிஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. நிறுவனத்தின் தலைவரும் இயக்குநர் குழு உறுப்பினருமான யுபி பிரவீண் ராவ் கூடுதலாக பிரசாத் வகித்த பொறுப்புகளைக் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்நிறுவனத்துக்கு செயல் தலைவராக என்.ஆர். நாராயண மூர்த்தி திரும்பியபிறகு இந்நிறுவ னத்திலிருந்து வெளியேறும் 12-வது நபர் இவராவார். அசோக் வெமூரி, வி. பாலகிருஷ்ணன், பசப் பிரதான், சந்திரசேகர் காகல், ஸ்டீபன் பிராட் ஆகியோர் இந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய முக்கியமான தலைவர்களாவர்.
மும்பையில் நடைபெற்ற மோர்கன் ஸ்டான்லி மாநாட்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறுவோர் விகிதம் அதிகமாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது முக்கிய தலைவர்கள் வெளி யேறுவது துரதிருஷ்டவசமானது என்றும் அடுத்த நிலையில் உள்ள தலைவர்களுக்கு இது வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த தலைவர் ஒருவர் இந்நிலையில் பதவியை ராஜிநாமா செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
முன்னணி தலைவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியே றுவது நிறுவனத்தின் எதிர் காலத்தை பாதிக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கவலை யடைந்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் கோடக் நிறுவனத் தைச் சேர்ந்த வல்லுநர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில், நிறுவ னத்தின் தலைமைச் செயல் அதிகாரி தேர்வில் இன்ஃபோசிஸ் நிறுவனம் திறமை குறைந்த வகையில் செயல்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலை தொடரும்பட்சத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு லாபமும் வெகு வாகக் குறையும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.