ஜப்பான் தொழில்நுட்பத்தில் உயர் திறன் டிராக்டர்: ஐடிஎல் நிறுவனம் அறிமுகம்

சோலிஸ் டிராக்டரை அறிமுகம் செய்யும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல்
சோலிஸ் டிராக்டரை அறிமுகம் செய்யும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல்
Updated on
1 min read

இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனம் (ஐடிஎல்) ஜப்பானைச் சேர்ந்த யான்மார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு புதிய ரக டிராக்டர்களைத் தயாரித்துள்ளது.

உயர் திறன் கொண்ட இந்த டிராக்டர்கள் சோலிஸ் ஹைபிரிட் 5015 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த டிராக்டர்களின் விற்பனையக விலை ரூ. 7.21 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த டிராக்டரில் இ-பவர் பூஸ்ட் என்ற தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை சோலிஸ் யான்மார் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்திடமிருந்து இதற்கான உரிமையைப்பெற்று இந்த நவீன டிராக்டரில் இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

இந்த டிராக்டர் நான்கு சக்கர சுழற்சி கொண்டது. இதன் மூலம் பெறப்படும் இயங்கு ஆற்றலை மின்னாற்றலாகவும் இது மாற்றி பயன்படுத்துகிறது.

இதனால் 50 சிசி திறன் கொண்ட இந்த டிராக்டரிலிருந்து 60 சிசி திறன் வெளிப்படுகிறது. அதேசமயம் 45 சிசி திறன் கொண்ட டிராக்டர் பயன்படுத்தும் எரிபொருள் அளவை இது பயன்படுத்துவதால் எரிபொருள் சிக்கனமானதாகவும் இது விளங்குகிறது.

இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது ஹைபிரிட் மாடலாக செயல்படுகிறது. இந்த பேட்டரியை வீட்டிலிருந்து சார்ஜ் செய்ய முடியும். இதில் உள்ள ஸ்மார்ட் எல்இடி திரையில் பேட்டரியின் மின் அளவு தெரியும். இதனால் பேட்டரி குறையும்போது சார்ஜ் செய்ய முடியும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in