டீசல் வாகனங்கள் பதிவு: பசுமை தீர்ப்பாயத்திடம் கார் விற்பனையாளர்கள் முறையீடு

டீசல் வாகனங்கள் பதிவு: பசுமை தீர்ப்பாயத்திடம் கார் விற்பனையாளர்கள் முறையீடு
Updated on
1 min read

டெல்லியில் புதிதாக டீசல் கார்களை பதிவு செய்ய வேண்டாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு டெல்லியில் உள்ள கார் விற்பனையாளர்கள் தாக்கல் செய்த மனுவை பரிசீலிப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

இந்த மனுவை செவ்வாய்க் கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தீர்ப்பாயத்தின் தலைவரும் நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தெரிவித் துள்ளார். டெல்லியில் உள்ள கார் விநியோகஸ்தர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பின்கி மிஸ்ரா ஆஜரானார். 2015-ல் தயாரிக்கப்பட்ட டீசல் கார்களை விற்பனை செய்ய தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்காவிட்டால் அவை தங்களிடம் தேங்கிவிடும். அடுத்த ஆண்டு அவற்றை விற்பனை செய்வது கடினம் என்று குறிப்பிட்டிருந்தார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் டெல்லியில் டீசல் கார்களை புதிதாக பதிவு செய்யக் கூடாது என்றும், 10 ஆண்டுகளுக்கு மேம்பட்ட வாகனங்களை மறு பதிவு செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

அத்துடன் மத்திய, மாநில அரசுகள் இனிமேல் டீசல் வாகனங்களை வாங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தது.

மேலும் நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள்,பொதுத் துறையினர், காவல்துறை உள்ளிட் டவை டீசல் வாகனங்களை படிப்படியாகக் குறைப்பதற்கு எடுக்கப் படும் நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக லாரிகளை நீக்குவது தொடர்பான நடவடிக்கைகளை ஜனவரி 6-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

அரசு பள்ளிகள் அனைத்தும் பசுமை சூழல் உருவாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் காற்று வடிகட்டி நிறுவ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதிக்குப் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களை டெல்லிக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in