

பங்குச்சந்தையின் வர்த்தகம் ஏற்றத்தில் தொடங்கியது. வர்த்த கத்தின் ஆரம்பத்தில் 25711 புள்ளியை சென்செக்ஸ் தொட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்ததால் சென்செக்ஸ் சரிந்தது. மேலும் பருவ மழை குறித்த செய்தியும் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
எல்நினோ காரணமாக வடமேற்கு இந்தியா அதிகமாக பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். வட மேற்கு இந்தியாவில் சராசரியாக பெய்யும் மழை அளவில் 85 சதவீதம் மட்டுமே மழை பெய்யும் என்று அதன் இயக்குநர் ராய் தெரிவித்தார். மேலும், மத்திய இந்தியாவில் சராசரி அளவை விட 94 சதவீதமும், தென்னிந்தியாவில் சராசரி அளவை விட 93 சதவீத மழை இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த காரணங்களால் வர்த்த கத்தின் இடையே 25711 புள்ளியை தொட்ட சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 25347 என்ற அளவுக்கு சரிந்தது. மதியத்துக்கு பிறகு ஏற்றம் கண்ட சென்செக்ஸ் 3 புள்ளிகள் உயர்ந்து 25583 புள்ளியில் முடிவடைந்து.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1.8 புள்ளிகள் உயர்ந்து 7656 என்ற புள்ளியில் முடிவடைந்தது. ஐ.டி., ஹெல்த்கேர் துறை பங்குகளில் வாங்கும் போக்கு இருந்தது.