நரேந்திர மோடி பிரிட்டன் பயணத்தில் 28 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து

நரேந்திர மோடி பிரிட்டன் பயணத்தில் 28 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள பிரிட்டன் சுற்றுப் பயணத்தின் விளைவாக இரு நாடுகளிடையே 920 கோடி பவுண்ட் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்தியா யுகே தொழில்துறை தலைமைச் செயல் அதிகாரிகளின் கூட்டமைப்பு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இரு நாடுகளில் நிலவும் முதலீட்டு, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இரு நாட்டு பிரதமரிடமும் தெரிவிக்கும்.

இரு நாடுகளின் தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற முதலாவது கூட்டம் 11 டௌனிங் தெருவில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த அரங்கம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் அதிகாரபூர்வ வீட்டுக்கு (10 டௌனிங் தெரு) பக்கத்தில் உள்ளது.

வோடபோன் நிறுவனம் 130 கோடி பவுன்ட் தொகையை இந்தியாவில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. வோட போன் நிறுவனம் மீது வரி தொடர்பான பிரச்சினை உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் மிக அதிக அளவிலான முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள உள் ளது பிற முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை என்ஹெச்எஸ் அறக்கட்டளை மற்றும் இந்தியா யுகே ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதன் படி கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை ஒன்று சண்டீகரில் உருவாக்கப்படும். இதன் மூலம் 500 டாக்டர்கள் மற்றும் 2,500 நர்ஸ்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஜினஸ் ஏபிஎஸ் நிறுவனம் 10 லட்சம் பவுண்ட் தொகையை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இந்நிறுவனம் மஹாராஷ்டிர மாநிலம் புணேயில் அதிநவீன பால் சார்பான மரபியல் ஆய்வகத்தை அமைக்க முன்வந்துள்ளது.

இதேபோல இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் முன்னணி யில் உள்ள சூரிய மின்னுற்பத்தி நிறுவனமான சோலார் பிவி நிறுவனம் 200 கோடி பவுண்ட் களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்தியத் தொழிலகக் கூட்ட மைப்புடன் (சிஐஐ) பிரிட்டனின் இணையதள வர்த்தகத்துக்கு உதவும் அமைப்பான கிளவுட் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் தொழில்துறையினர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட வழியேற்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இணையதளம் மூலமான பரிவர்த்தனை 350 கோடி பவுண்ட்களைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துமனையு டன் இணைந்து இந்தியாவில் ஆயிரம் விற்பனையகங்களை அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத் தப் போவதாக ஹாலண்ட் அண்ட் பாரெட் இண்டர்நேஷனல் நிறுவ னம் அறிவித்துள்ளது. இதன் மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்புக்கிடைக்கும்.

இந்தியாவிலிருந்து டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்திரி, பார்தி எண்டர்பிரைசஸ் குழுமத் தலைவர் சுனில் பார்தி மிட்டல், டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி என். சந்திரசேகரன், பாரத் ஃபோர்ஜ் நிறுவனத் தலைவர் பாபா கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நல்ல மதிப்பு

பிரிட்டன் தொழிலதிபர்கள் மத்தியில் மிகச் சிறந்த அபிப்ராயத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி விட்டதாக மும்பை பங்குச் சந்தை தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகான் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளிடையே வர்த்தகம் பெருகுவதற்கான தருணம் உருவாகியுள்ளது. இதை இரு நாட்டு பிரதமர்களும் உறுதி செய்துள்ளனர் என்றார்.

இந்தியாவை சர்வதேச சமூகத்தினர் மத்தியில் எப்படி நிலை நிறுத்த வேண்டும் என்பதை தனது சிறப்பான உரையின் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்று இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பாய் குறிப்பிட்டார். உலக மக்கள் தொகையில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தியாவை எந்த ஒரு நாடும் புறக்கணிக்க முடி யாது என்ற அவரது பேச்சு பிரிட்டன் தொழிலதிபர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in