Published : 08 Apr 2021 10:56 am

Updated : 08 Apr 2021 10:56 am

 

Published : 08 Apr 2021 10:56 AM
Last Updated : 08 Apr 2021 10:56 AM

தொடர்ந்து உயரும் தங்கம் விலை; 2 நாட்களில் பவுனுக்கு ரூ.696 அதிகம்

gold

சென்னை

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 87 ரூபாயும், பவுனுக்கு 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.


இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ.4345-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.34760-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.37632-க்கு விற்பனையாகிறது.

கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 87 ரூபாயும், பவுனுக்கு 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 40 பைசா உயர்ந்து ரூ.71.30க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,300 ஆக உள்ளது.


தவறவிடாதீர்!



தங்கம் விலைதொடர்ந்து உயரும்Goldசென்னைவிலைவெள்ளி விலை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x