வீடுகளுக்கான நவீன ஸ்விட்சுகள்: ஹேவல்ஸ் அறிமுகம்

வீடுகளுக்கான நவீன ஸ்விட்சுகள்: ஹேவல்ஸ் அறிமுகம்
Updated on
1 min read

மின்சாதன உற்பத்தியில் ஈடுபட் டுள்ள ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம் தற்போது வீடுகளுக் கான ஸ்விட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் வாடிக் கையாளர்களின் குறைகளைக் கேட்டறிய சென்னையில் ஒரு அழைப்பு மையத்தையும் (கால் சென்டர்) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் தங்களது வர்த்தகத்தை விரிவு படுத்தும் நோக்கில் இத்த கைய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைவர் ஏ.வி. ஜெகதீஷ் தெரிவித்தார்.

வழக்கமான ஸ்விட்சுகளி லிருந்து மாறுபட்டு, அதாவது நவீன வீடுகளுக்கேற்ற வகை யில் பல்வேறு சிறப்பம்சங் களுடன் இந்த ஸ்விட்சுகள் (ஸ்விட்ச் கியர்) தயாரிக்கப்பட் டுள்ளன.

இத்தகைய ஸ்விட்சு களுக்கான வடிவமைப்பு, தொழில்நுட்பம் வெளிநாடு களிலிருந்து பெறப்பட்டாலும் இவை முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இவை உள்நாட்டு உபயோ கத்துக்கும் ஏற்றுமதிக்காகவும் தயாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஸ்விட்சு களுக்கான ஆண்டு வர்த்தகம் ரூ.2,200 கோடியாகும். இதில் 28 சதவீத சந்தையை ஹேவல்ஸ் பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே 80 இருக்கை களுடன் குர்காவ்னில் அழைப்பு மையம் செயல்படுவதாகவும், தற்போது சென்னையில் கூடுதலாக ஒரு அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார்.

வாடிக்கையாளர்களின் குறைகள் 24 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும். இதற்கென 2,250 பொறியாளர்களும் 450 பிரான்சைஸி நிறுவனங்களும் உள்ளதாகவும் தமிழகத்தில் 70 பொறியாளர்கள் செயல்படுவ தாகவும் அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in