

தற்போது நிலவி வரும் நிதி நெருக்கடியிலிருந்து சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு விவசாயிகள் வெளிவர எத்தனால் கொள்முதலுக்கு எடுக்கப்படும் கரும்பு விலையை இணைத்து நிலையான விலைக் கொள்கையை அரசு அறிவிக்க வேண்டும் என்று இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் ஏ.வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எத்தனாலுக்கு விதிக் கப்படும் மத்திய சுங்க வரியை நீக்குவது, கரும்பு விவசாயிகளுக்கு வட்டி அல்லாத கடன் ரூபாய் 6,000 கோடிக்கு அறிவிப்பது, 266 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி இருப்பதால் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதை 10 சதவீதம் அதிகரிப்பது என்பது உட்பட பல கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.
இடையூறுகள்
எத்தனால் எரிபொருள் உற்பத்திக்கு அனுமதி வழங் காமல் இருப்பது மற்றும் தாமதிப்பது, முக்கியமான எரிபொருளுக்கு வரிகளை விதிப்பது போன்ற இடையூறு களை நீக்கவேண்டும் என்று ஏ.வெள்ளையன் கேட்டுக் கொண் டுள்ளார். எத்தனால் மாற்று எரிபொருள் மட்டும் அல்ல. இது அந்நிய செலாவணியை குறைக்கும் அதுமட்டுமல்லாது இதன் நேரடி பயன் கரும்பு விவசாயிகளை சென்றைடையும் என்றும் கூறியுள்ளார்.