

ஹோட்டல் மாரியாட் இண்டர் நேஷனல் நிறுவனம் ஸ்டார்வுட் ஹோட்டல் நிறுவனத்தை வாங்கி யுள்ளது. இதன் மூலம் மாரியாட் உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமாக மாறியுள்ளது. ஸ்டார்வுட் ஹோட்டல் நிறுவ னத்தின் மதிப்பு 1,220 கோடி டாலராகும்.
இந்த இணைப்பு முடிவுக்கு வந்தால் மேலும் 50 சதவீத அறைகள் மாரியாட் நிறுவனத் தோடு சேரும். மேலும் ஸ்டார்வுட் நிறுவனங்களான ஷெரட்டன், வெஸ்டின் ஆகியவற்றை இணைக்கும் போது புதிய நிறுவ னத்திற்கு சொந்தமாக உலகம் முழுவதும் 5,500 இடங்களில் 11 லட்சம் அறைகள் மாரியாட் ஹோட்டலோடு இணையும். இந்த ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு மத்தியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரியாட் ஹோட்டலுக்கு அடுத்து ஹில்டன் நிறுவனம் உள்ளது. உலகம் முழுவதும் 4,500 இடங்களில் 7,35,000 அறை களைக் கொண்டுள்ளது ஹில்டன் நிறுவனம்.
இது குறித்து ஸ்டார்வுட் நிறுவனத்தின் சிஇஓ ஆடம் ஆரோன் கூறுகையில், “விலை புள்ளிகள் நெருக்கடியாக உள்ள சூழ்நிலையில், சந்தையில் வெற்றி அடைவதற்கு மிகப் பெரிய அளவில் பிராண்ட்கள் மற்றும் ஹோட் டல்களை விநியோகம் செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.
அடிக்கடி வணிக பயணம் செல்லும் பயணிகள் இந்த ஒப்பந்தத்தை நெருக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாரியாட் நிறுவனத்தின் சிஇஓ அர்னே சொரேன்சன் கூறுகை யில், “இந்த இணைப்பு சொகுசு பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும்” என கூறினார்.
மாரியாட் சர்வதேச அளவில் வளர்ச்சி அடைவதற்கு ஸ்டார்வுட் நிறுவனத்தின் இணைப்பு மிகவும் உதவியாக இருக்கும். ஸ்டார்வுட் நிறுவனம் சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.