வெளிப்படையான, எளிய வரி விதிப்பு முறைகள்: ஆசியான் மாநாட்டில் மோடி பேச்சு

வெளிப்படையான, எளிய வரி விதிப்பு முறைகள்: ஆசியான் மாநாட்டில் மோடி பேச்சு
Updated on
2 min read

வெளிப்படையான, கணிக்கக் கூடிய வரி விதிப்பு முறைகள் நிச்சயம் கொண்டு வரப்படும். எனவே முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகளை தைரியமாக மேற் கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நேற்று கோலாலம்பூரில் நடை பெற்ற ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் அவர் மேலும் பேசியது:

கடந்த 18 மாதங்களாக நாட்டின் பணவீக்கத்தைத் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதிகரிக்கவும் முதலீடுகளை ஈர்க்க வும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சீர்திருத்தம் என்பதற்கு முடிவே கிடையாது. சீர்திருத்தம் என்பது என்னைப் பொறுத்தமட்டில் ஒரு நீண்ட பயணத்தின்போது வரும் ஒரு நிலையம் போன்றது. பயணத்தின் இலக்கு இந்தியாவை மாற்றுவது தான் என்று அவர் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டு மே மாதம் பாஜக தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பேற்ற போது பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, முடங்கிப் போன பல கட்டமைப்புத் திட்டப் பணிகள் இவற்றுடன் தொடர்ந்து பணவீக்கமும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.

இத்தகைய சூழலில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மிகவும் அவசிய மாக இருந்தது. எதை சீர்திருத்த வேண்டும். சீர்திருத்த நடவடிக்கை யின் இலக்கு என்ன என்று எங்க ளுக்குள்ளேயே பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம். வெறுமனே பொருளாதார வளர்ச்சியை அடைவதா அல்லது இந்த சமுதாயத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவதா என்பதே எங்கள் முன்பிருந்த கேள்விகளாகும். இதற்கு எனது பதில் சீர்திருத்தம் மூலம் மாற்றம் என்பதுதான்.

சீர்திருத்த நடவடிக்கையின் பலன் அனைத்து தரப்பினரையும் அதாவது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதாகும்.

கடந்த 18 மாதங்களில் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பலனாக நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அதி கரித்துள்ளது. பணவீக்கம் கட்டுக் குள் உள்ளது. வரி வருமானம் உயர்ந்துள்ளது. அதேசமயம் கடனுக்கான வட்டி விகிதம் குறைந் துள்ளது. நாட்டின் பற்றாக்குறை அளவும் குறைந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் ஸ்திரமாக உள்ளது என்று மோடி சுட்டிக் காட்டினார்.

ஒவ்வொரு கட்டமாக மேற்கொள் ளப்பட்ட மாற்றங்கள் வேகமான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக வெளிப்படையான வரி விதிப்பு தன்மையைக் கொண்டு வர வழியேற்பட்டுள்ளது. முன்கூட்டியே கணிக்கக் கூடிய அளவிலான வரி விதிப்பு முறை கொண்டு வரப்படும். இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் நேர்மையாக வரி செலுத்துவோர் விஷயத்தில் உடனடியாக மற்றும் வெளிப்படையான முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

அனைத்துக்கும் மேலாக அறிவு சார் சொத்துரிமை காக்கப்படும். இந்த விஷயத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற் காக ஆன்லைன் மூலம் ஆவணங் கள் சரிபார்த்தல் உள்ளிட்ட நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருங்கிணைந்த தேசிய அறிவுசார் காப்புரிமை கொள்கை விதிகள் கொண்டு வரப்படும் என்றார்.

முதலீடுகளை ஈர்க்கும் வகை யில் கட்டமைப்பு மற்றும் நிதி சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டுள்ளன. மேலும் பொருளா தாரத்தை தாராளமயமாக்கு வதற்காக பல்வேறு அந்நிய முதலீட்டு வரம்புகள் தளர்த்தப் பட்டுள்ளன. கணிக்கக் கூடிய ஸ்திரமான வரி விதிப்பு முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சர்வதேச பொருளாதாரம் குறிப் பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சியை எட்டவில்லை. ஆனால் இந்தியா வில் குறிப்பிடத்தக்க நடவடிக்கை கள் மூலம் வளர்ச்சி எட்டப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

உற்பத்தித் துறையில் 25 சதவீத வளர்ச்சி எட்டப்படும்போது ஜிடிபியில் இத்துறையின் பங் களிப்பு கணிசமாக இருக்கும். இதற் காகத்தான் மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கு வதற்காகத்தான் இத்திட்டத்துக்கு செயலூக்கம் தரப்படுவதாக குறிப் பிட்டார்.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடு கையில் தொழில்துறை உற்பத்தி குறியீட்டெண் (ஐஐபி) ஓரளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவை உற்பத்தித் துறையின் களமாக மாற்றுவதற் கான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாகக் குறிப்பிட்டார்.

ஆசியானில் உள்ள 10 நாடு களும் ஒருங்கிணைந்து பொருளா தார வல்லரசாக உருவாக முடியும். இதன் மூலம் உலகின் வலுவான பொருளாதார மண்டலமாக இப் பிராந்தியம் உருவாகும் என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in