

நடப்பாண்டில் இந்திய பொரு ளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மூடி’ஸ் தரச் சான்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப அடுத்த அடுத்த ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டு இறுதியான 31, மார்ச் 2016 நிலவரப்படி இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் 2017 நிதியாண்டின் இறுதியில் 7.6 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளது.
2012 முதல் 2014 நிதியாண்டு களைவிட 2015 நிதியாண்டின் வளர்ச்சி ஏற்றமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, இந்திய பொருளாதாரம் மீண்டும் சீரான நிலையில் உள்ளதாக கூறுகிறது.
இதற்கு ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் பக்க பலமாக இருந்துவருகிறது என்றும் மூடி’ஸ் குறிப்பிட்டுள்ளது.