

மரபு சாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் மூலம் அடுத்த 7 ஆண்டுகளில் 175 கிகாவாட் மின்சார உற்பத்தி என்ற இலக்கை எட்டுவது மிகவும் சவாலான விஷயமாகும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
சர்வதேச எரிசக்தி தொழில்நுட்ப மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய மரபுசாரா எரிசக்தி வளங்கள் ஒன்றுதான் மாற்று வழியாக இருக்கும் என்றார்.
எரிசக்தியில் சூழலுக்கு பாதிப்பில்லாத இரண்டு இயற்கை வளங்கள் உள்ளன. அவை சூரிய சக்தி மற்றும் காற்று. இத்தகைய மரபு சாரா எரிசக்தி மூலம் 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்ற இலக்கானது மிகவும் சவாலானது.
அடுத்த 7 ஆண்டுகளுக்குள் சூரிய ஆற்றல் மூலம் 100 கிகாவாட் மின்னுற்பத்தியும், சாற்றாலை மூலம் 60 கிகா வாட் உற்பத்தி செய்வது என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. இதற்கு 15,000 கோடி டாலர் நிதி தேவைப்படும் என்று அவர் கூறினார்.
சூரிய மின்னாற்றல் பேட்டரிகளின் திறனை அதி கரிக்க வேண்டியது மிகவும் அவசியம். இவற்றின் செயல் திறனை 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்த வேண் டும் என்று சுரேஷ் பிரபு கூறி னார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய மின்துறை அமைச்சர் பியுஷ் கோயல் இந்த இலக்கை எட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து திட்டம் தீட்டி வருவதாகக் கூறினார். அடுத்த நான்கரை ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.